உள்ளூர் செய்திகள்
போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு
- குமாரபாளையம் பகுதி களில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி, கூட்டங்கள் பள்ளி கள் மற்றும் நகரின் முக்கிய சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.
- ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போதை பொருட்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் பகுதி களில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி, கூட்டங்கள் பள்ளி கள் மற்றும் நகரின் முக்கிய சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போதை பொருட்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .
அப்போது போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மலர்விழி பேசுகையில், போதை பொருட்கள் பயன்படுத்துவோர், விற்போர் குறித்து தகவல் கிடைத்தால் தெரியப்படுத்துங்கள். தகவல் தருபவர்கள் பெயர்கள் பாதுகாக்கப்படும். சட்டம், ஒழுங்கு மீறுவோர் மீது பாரபட்சமின்றி உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் இளமுருகன், சிவகுமார், தன்ராஜ், எட்டுகள் ராம்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.