கழுகுகள் பாதுகாப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
- கூடு கட்டும் பருவத்தை வரவேற்கும் விதமாக பொங்கல் வைக்கப்பட்டது.
- உலக பாறு கழுகுகள் தினம் கொண்டாடப்பட்டது.
ஊட்டி,
மசினகுடி, சீகூர் வனப்பகுதியில் கழுகுகள் பாதுகாப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கழுகுகள் தினம் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ், மசினகுடி கோட்ட துணை இயக்குநர் அருண்குமார் உத்தரவின்படி, மசினகுடியில் உலக பாறு கழுகுகள் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு மசினகுடி வனச்சரகர் பாலாஜி தலைமை தாங்கினார். இதில் பள்ளி மாணவ-மாணவிகள், நீலகிரி மாவட்ட மருந்து விற்பனையாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். சீகூர் வனச்சரகத்தில் உள்ள ஜகலிக்கடவு பகுதியில் உலக பாறு கழுகுகள் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வனச்சரகர் ஜான் பீட்டர் தலைமை தாங்கினார். பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாறு கழுகுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து பாறு கழுகுகள் கூடு கட்டும் பருவத்தை வரவேற்கும் விதமாக பொங்கல் வைக்கப்பட்டது. பின்னர் பள்ளி மாணவர்களுக்கு படம் வரைதல் மற்றும் பரமபதம் விளையாட்டு மூலம் பாறு கழுகுகள் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.