உள்ளூர் செய்திகள்

மோகனூர் பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்

செஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-07-22 10:05 GMT   |   Update On 2022-07-22 10:05 GMT
  • கபிலர்மலை, மோகனூர் பகுதியில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் அலுவலக வளாக முன்பு செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பரமத்திவேலூர்:

சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ சென்னை மாமல்லபுரத்தில் வரும் 28- ந் தேதி தொடங்குகிறது.இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தமிழக முழுவதும் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கபிலர்மலை ஒன்றிய பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் அலுவலக வளாக முன்பு செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜே.பி.ரவி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) பரமசிவம் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(நிர்வாகம்) நாகராஜ் அனைவரையும் வரவேற்றார். செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மோகனூர்: நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேருந்து நிலையத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) தேன்மொழி,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(நிர்வாகம்) பரமேஸ்வரன், மோகனூர் பேரூராட்சித் தலைவர் வனிதா மோகன்குமார், துணைத் தலைவர் சரவணகுமார் , இளநிலை உதவியாளர் சுரேஷ்ராஜ், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மணி, கார்த்திக் , மகளிர் சுய உதவி குழுவினர்,துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மற்றும் பேரூராட்சிஅலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News