உள்ளூர் செய்திகள்

பேரணியை பாளை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

ஷிபா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு வாகன பேரணி

Published On 2023-03-20 09:02 GMT   |   Update On 2023-03-20 09:02 GMT
  • பேரணியானது கொக்கிரகுளம் அறிவியல் மையத்தில் இருந்து தொடங்கியது.
  • தலைகாய முதலுதவி சிகிச்சை முறைகளை பற்றி மருத்துவர் ஷியாவுல்லா விளக்கினார்.

நெல்லை:

நெல்லை ஷிபா மருத்துவமனை சார்பில் உலக தலைகாய விழிப் புணர்வு வாகன பேரணி இன்று நடைபெற்றது. கொக்கிரகுளம் அறிவியல் மையத்தில் இருந்து தொடங்கிய இப்பேரணிக்கு ஷிபா மருத்துவமனைகள் மருத்துவ இயக்குநர் டாக்டர் முஹம்மது அராபத் தலைமை தாங்கினார். டாக்டர்கள் சுப்பிரமணியன், முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை பாளை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியானது வண்ணார்பேட்டை, சமாதானபுரம் வழி யாக மேட்டுத்திடல் முஸ்லீம் அனாதை நிலைய வளாகத்தில் நிறை வடைந்தது. நிகழ்ச்சியில் ஷிபா மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள், சதக்அப்துல்லா கல்லூரி மாணவ-மாணவிகள், மருந்து விற்பனை பிரதிநிதி சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணியின் முடிவில் தலைகாய முதலுதவி சிகிச்சை முறைகளை பற்றி ஷிபா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் ஷியாவுல்லா விளக்கினார்.

உலக தலைகாய தின சிறப்பு செய்தியினை மருத்துவமனையின் மூளை நரம்பியல் மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜேஷ், நரம்பியல் நிபுணர் டாக்டர் அழகேசன் ஆகியோர் உரையாற்றினர். சிறப்பு விருந்தினராக எம்.கே.எம். செய்யது அஹமது கபீர் கலந்து கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை மார்கெட்டிங் பிரிவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News