உள்ளூர் செய்திகள்

பயிற்சி பட்டறை நடந்தபோது எடுத்த படம்.

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் விழிப்புணர்வு பயிற்சி பட்டறை

Published On 2023-08-30 08:55 GMT   |   Update On 2023-08-30 08:55 GMT
  • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இருதய செயலிழப்பிற்கான முதலுதவி பற்றிய விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நடைபெற்றது.
  • டாக்டர் ஷீயாவுல்லா இருதய செயலிழப்புக்கான காரணங்களையும், முதலுதவி சிகிச்சை முறைகளையும் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்து பேசினார்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் தேசிய மாணவர் படை சார்பில் இருதய செயலிழப்பிற்கான முதலுதவி பற்றிய விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி. மகேந்திரன் தலைமை தாங்கினார். தேசிய மாணவர் படை அதிகாரி வீ.சிவ இளங்கோ வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். ஷிபா மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு டாக்டர் ஷீயாவுல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருதய செயலிழப்புக்கான காரணங்களையும், முதலுதவி சிகிச்சை முறைகளையும் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்து பேசினார். முதலுதவி குறித்து மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளித்தார். இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் இயக்குனர் மோதிலால் தினேஷ் நன்றி கூறினார். இதில் பேராசிரியர்கள் ஜிம்ரீவ்ஸ் சைலண்டு நைய், மாலை சூடும் பெருமாள், மருதையா பாண்டியன், சிவ முருகன், அசோகன், பிரியதர்ஷினி, சிவந்தி வானொலி மைய பொறுப்பாளர் கண்ணன், ஷிபா மருத்துவமனை ஊழியர்கள் ராதாகிருஷ்ணன், அருண், சுகன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஆலோசனையின் பேரில் இளைஞர் செங்சிலுவை சங்க இயக்குனர், தேசிய மாணவர் படை அதிகாரி மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News