உள்ளூர் செய்திகள்

விழாவில் பூக்குழி இறங்கிய அய்யப்ப பக்தர்களை படத்தில் காணலாம்.

வடமதுரை அருகே பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய அய்யப்ப பக்தர்கள்

Published On 2022-12-05 05:15 GMT   |   Update On 2022-12-05 05:15 GMT
  • கார்த்திகை மாதம் மண்டல பூஜையின் போது யாழி பூஜை நடத்தப்படும். அதன்படி நேற்று இரவு ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.
  • ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள தொட்டணம்பட்டியில் அய்யப்பன்கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மண்டல பூஜையின் போது யாழி பூஜை நடத்தப்படும். அதன்படி நேற்று இரவு ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.

அங்கு அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த அய்யப்ப சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பெண்கள் திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். விழாவை முன்னிட்டு 7 சிறுமிகள் சப்த கன்னிகளாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கோவில் முன்பு பூக்குழி ஏற்பாடு செய்யப்பட்டு அதில் எரியோடு, நல்லமனார்கோட்டை, தொட்டணம்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழாவில் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News