சின்னசேலத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை
- கோவில் பின்புறம் வைத்து உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
- சி.சி.டி.வி. கேமரவை மேலே திருப்பி விட்டு விட்டு ஹார்டு டிஸ்கை மட்டும் திருடி சென்றுள்ளனர்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பஸ் நிலையத்தில் இருந்து நயினார் பாளையம் செல்லும் சாலையில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு இரவு சென்ற மர்ம நபர்கள் உண்டியலை தூக்கிச் சென்று கோவில் பின்புறம் வைத்து உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். கோவில் கருவறை பக்கத்தில் உள்ள சி.சி.டி.வி. ஹார்ட் டிஸ்கையும் திருடி சென்றுள்ளனர். இது குறித்து கோவில் நிர்வாகம் சின்னசேலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக், தனிபிரிவு போலீஸ்காரர் கணேசன் ஆகியோர் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கோவில் உண்டியல் பணம் எண்ணும் பணியானது 3 நாட்களுக்கு முன்பு தான் நடைபெற்றதால் பெரிய அளவில் பணம் திருட்டு போகாமல் தப்பியது என்றும், அதனால் உண்டியலில் 300 ரூபாய் மட்டுமே இருந்ததாகவும் சி.சி.டி.வி. கேமரவை மேலே திருப்பி விட்டு விட்டு ஹார்டு டிஸ்கை மட்டும் திருடி சென்றுள்ளனர் என்றும் கோவில் உள்ளே இருந்த சாமி நகைகள், வெண்கல சிலைகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது ஆனால் திருடர்கள் குறி வைத்து ஹார்ட் டிஸ்கை மட்டும் திருடிச் சென்றுள்ளனர் எனமுதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.