உள்ளூர் செய்திகள்

பிங் ட்ரம்பெட் மரத்தில் அழகிய இளஞ்சிவப்பு மலர்கள் பூத்துக்குலுங்குகிறது.

பிங் ட்ரம்பெட் மரத்தில் பூத்துக்குலுங்கும் அழகிய இளஞ்சிவப்பு மலர்கள்

Published On 2023-05-03 08:41 GMT   |   Update On 2023-05-03 08:41 GMT
  • மார்ச் மாத இறுதியில் பூக்கள் பூக்கத்தொடங்கி மே தொடக்கம் வரை பூத்துக்குலுங்கும்.
  • பூத்துக்குலுங்கும் மலர்களின் அழகை கண்டு ரசித்து இந்த மரத்தை செல்போனில் படம் எடுத்து செல்கின்றனர்.

திருத்துறைப்பூண்டி:

முத்துப்பேட்டை அடுத்த பாண்டிக்கோட்டகம் பாலம் அருகே ஒரே ஒரு அரிய வகை மரம் உள்ளது.

இந்த மரத்தின் பெயர் பிங் ட்ரம்பெட் மரமாகும்.

இந்த வகை மரங்கள் அதிகளவில் பெங்களூரில் தான் காணப்படுகிறது.

இந்த பிங் ட்ரம்பெட் மரத்தில் மார்ச் மாத இறுதியில் பூக்கள் பூக்கத்தொடங்கி மே தொடக்கம் வரை பூத்துக்குலுங்கும்.

இதுவே சீசன் காலமாகும்.

தற்போது சீசன் தொடங்கிவிட்ட நிலையில் அழகிய இளஞ்சிவப்பு மலர்களுடன் காண்போரின் மனதை ஆர்ப்பரிக்கும் வகையில் இந்த மரம் காட்சியளிக்கிறது.

அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் சிலர் பூத்துக்குலுங்கும் மலர்களின் அழகை கண்டு ரசித்து இந்த மரத்தை செல்போனில் படம் எடுத்து செல்கின்றனர்.

ஆனால், அப்பகுதி மக்களுக்கு இந்த மரத்தின் பெயர் மற்றும் இதன் சிறப்புகள் தெரியவில்லை.

எனவே, பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த மரத்தை யாரும் வெட்டாமல் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.

Tags:    

Similar News