உள்ளூர் செய்திகள்

பூமி பூஜையில் பங்கேற்றவர்கள்.

பல்லடம் நகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை

Published On 2022-06-10 07:47 GMT   |   Update On 2022-06-10 07:47 GMT
  • கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் துவங்குவதற்கு அந்தந்த இடங்களில் பூமி பூஜை நடைபெற்றது.
  • திட்டப் பணிகளை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

பல்லடம்,

பல்லடம் நகராட்சி சார்பில், நமக்கு நாமே திட்டதின் கீழ் பல்லடம் டெக்ஸ்டைல் தொழில் கூட்டமைப்பு மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றின் பங்களிப்புடன் பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கூடுதல் சுகாதார வளாகம் கட்டுதல், பல்லடம் மந்தரகிரி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் பங்களிப்புடன் பல்லடம் அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறை அமைத்தல், பல்லடம் அறம் அறக்கட்டளை பங்களிப்புடன் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிய சுகாதார வளாகம் கட்டுதல், பல்லடம் முருகன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் பங்களிப்புடன் ராயர்பாளையம் நகராட்சி நடு நிலைப்பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் துவங்குவதற்கு அந்தந்த இடங்களில் பூமி பூஜை நடைபெற்றது.

திட்டப் பணிகளை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் விநாயகம், சுகாதார ஆய்வாளர் சங்கர், பணி மேற்பார்வையாளர் ராசுக்குட்டி, நகராட்சி கவுன்சிலர்கள், நகர திமுக பொறுப்பாளர் ராஜேந்திரகுமார், பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஜெமினி சண்முகம், மந்திரகிரி சிவக்குமார், அறம் அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார், பெற்றோர், ஆசிரியர் சங்க தலைவர் நடராஜ், பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News