உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டத்தில் மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் பேசினார்.

பள்ளியில் மாபெரும் புத்தக திருவிழா

Published On 2022-08-09 10:15 GMT   |   Update On 2022-08-09 10:15 GMT
  • மாபெரும் புத்தக திருவிழா வருகிற 18-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.
  • மாணவ-மாணவிகளின் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும் அறிவாற்றலை மேம்படுத்தவும் புத்தகங்கள் படிக்க வேண்டும்.

மன்னார்குடி:

மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் 2-வது மாபெரும் புத்தக திருவிழா வருகிற 18-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக திருவிழா நடைபெறும். இது தொடர்பாக மன்னார்குடியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதற்கு மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் டி.ரெங்கையன் தலைமை தாங்கினார். மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் புத்தக திருவிழா தொடர்பாக பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- 2-வது முறையாக புத்தக திருவிழா நடைபெற உள்ளது. மாணவ-மாணவிகளின் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும் அறிவு ஆற்றலை மேம்படுத்தவும் புத்தகங்கள் படிக்க வேண்டும். அதற்காக தான் புத்தக திருவிழா நடத்துகிறோம். மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் வாங்கும் புத்தகங்களுக்கு 15 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும். பொதுமக்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு புத்தகங்கள் வாங்கி பயன் பெற வேண்டும்.

மேலும் மாணவர்கள் தங்கள் வீட்டில் உள்ள புத்தகங்களை தானமாக அளிக்கலாம். இதற்காக புத்தக தானம் அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது.

ெமாத்தம் 40 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த முறை ரூ.40 லட்சம் அளவுக்கு புத்தகங்கள் விற்பனையாகியது. இம்முறை ரூ.1 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. புத்தக திருவிழா நடைபெறும் 11 நாட்களுக்கு பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அனைவரும் கலந்து கொண்டு புத்தக திருவிழாவை வெற்றியடைய செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மிட்டவுன் ரோட்டரி சங்க செயலாளர் வி.கோபாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர் சி.குருசாமி, யேசுதாஸ், அன்பரசு, சேதுராமன், பி.ரமேஷ், கோபால், கல்லூரி பேராசிரியர் இளங்கோவன் மற்றும் பொதுநல அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News