உள்ளூர் செய்திகள்

தருமபுரி அரசு மருத்துவமனையில் தொடரும் பைக் திருட்டு

Published On 2023-04-03 09:59 GMT   |   Update On 2023-04-03 09:59 GMT
  • நிறுத்திவிட்டு உறவினரை பார்த்து விட்டு திரும்பி வந்த போது பைக்கை காணவில்லை.
  • தருமபுரி நகர போலீசார் காணாமல் போன டூவீலர்களை தேடி வருகின்றனர்.

தருமபுரி,

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுவதற்காக வருகின்றனர்.

உள்நோயாளிகளின் உடன் இருப்பவர்களும் நோயாளிகளை பார்ப்பதற்காக உறவினர்கள் அதிகமானோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.

அப்போது தாங்கள் வரும் இருசக்கர வாகனங்களை மருத்துவமனை வாழாகத்தில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். பின்னர் திரும்பி வந்து பார்க்கும் பொழுது நிறுத்தி வைத்திருந்த டூவீலர் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகின்றனர்.

அதேபோல் நேற்று தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள சின்ன கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் சிலம்பரசன். இவரது உறவினர் தருமபுரி அரசு மருத்துவமனையில் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை பார்ப்பதற்காக சிலம்பரசன் பைக்கில் தருமபுரி வந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திவிட்டு உறவினரை பார்த்து விட்டு திரும்பி வந்த போது பைக்கை காணவில்லை.

தருமபுரி நகர போலீசில் புகார் அளித்தார். இதே போல பஞ்சப்பள்ளியைச் சேர்ந்த பூ வியாபாரி அன்பரசன். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து டூவீலரை நிறுத்திவிட்டு உறவினரை பார்ப்பதற்காக சென்று விட்டு திரும்பி வந்தபோது டூவீலரை காணவில்லை.

தருமபுரி நகர போலீசில் புகார் அளித்தார். இருவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த தருமபுரி நகர போலீசார் காணாமல் போன டூவீலர்களை தேடி வருகின்றனர்.

இது போன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதை கண்காணிக்க அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News