ராதாபுரத்தில் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
- ராதாபுரம் பஸ் நிலையம் அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
வள்ளியூர்:
நெல்லை தெற்கு மாவட்டம் ராதாபுரம் தெற்கு ஒன்றியம் பா.ஜனதா சார்பில் ராதாபுரம் பஸ் நிலையம் அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ராதை காமராஜ் பொறுப்பு வகித்தார். அரசு தொடர்பு பிரிவு தலைவர் வக்கீல் மணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து குடும்ப தலைவிக்கும் ரூ.1000 வழங்கிட கோரியும், கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்த கோரியும், டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தியும், மின்சார கட்டணத்தை குறைத்திட வேண்டியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட பேச்சாளர் கணேசன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சட்டமன்ற பார்வையாளர் சுந்தரம், கிளை தலைவர் சந்திரன், காரியாகுளம் முருகன், கணபதிநகர் தாசன், தவசிகுமார், சுப்பிரமனியபேரி ஈஸ்வரன், சுபாஸ், முருகன், மாணிக்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.