நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் ரத்ததான முகாம்
- தெற்குகள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.
- நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் இயற்பியல் துறையில் நியூஸ் லெட்டர் இதழ் வெளியீட்டு விழா நடந்தது.
வள்ளியூர்:
தெற்குகள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் இளம் செஞ்சிலுவை சங்கம், தேசிய தர மதிப்பீட்டுக்குழு சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் திலகேஷ்வர்மா, டாக்டர் புனிதா ரஞ்சிதம் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்தம் சேகரித்தனர். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் ரத்த தானம் வழங்கினர். ஏற்பாடுகளை இளம் செஞ்சிலுவை சங்க அலுவலர்கள் பிருந்தா, கிரிஜா, உள்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.
நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் இயற்பியல் துறையில் நியூஸ் லெட்டர் இதழ் வெளியீட்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். தெற்குகள்ளிகுளம் தர்ம கர்த்தா டாக்டர் எம்.ஜெபஸ்டின் ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நியூஸ் லெட்டர் இதழை வெளியிட்டார். அகத்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணை ப்பாளர் புஷ்பராஜ் வாழ்த்தி பேசினார். ஆசிரியர்கள், மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடல் மற்றும் போட்டிகள் நடைபெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்க ப்பட்டது. ஏற்பாடுகளை பேரா சிரியர்கள் ராய்சிச் ரெனால்ட், பிருந்தாமலர், ராஜகுமாரி ஆகியோர் செய்து இருந்தனர்.