உள்ளூர் செய்திகள்

விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

பெஸ்ட் மணி கோல்டு நிறுவனம் சார்பில் புத்தக வெளியீட்டு விழா

Published On 2022-10-06 06:27 GMT   |   Update On 2022-10-06 06:27 GMT
  • பாலமுத்தழகு குழுமத்தின் பெஸ்ட் மணிகோல்டு நிறுவனம் சார்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
  • திண்டுக்கல் ஐ.லியோனி நூலை வெளியிட அதனை பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா பெற்றுக்கொண்டார்.

உத்தமபாளையம்:

சென்னையில் உள்ள மியூசிக் அகடாமியில் பாலமுத்தழகு குழுமத்தின் பெஸ்ட் மணிகோல்டு நிறுவனம் சார்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதற்கு பாலமுத்தழகு குழுமத்தின் தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா தலைமை தாங்கினார்.

கவிஞர் தியாரூ எழுதிய 4 புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி வெளியிட்டார். அதனை பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா பெற்றுக்கொண்டார்.

விழாவில் லியோனி பேசுகையில், பாலமுத்தழகு குழுமம் தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இது பாராட்டுக்குரியது என்றார். நிகழ்ச்சியில், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் அயலக தமிழ்த்துறைத் தலைவர் குறிஞ்சிவேந்தன், பாலசாகித்ய புரஸ்கார் விருதாளர் ராணி பத்திரிகை ஆசிரியர் மீனாட்சி, ஓசூர் தமிழ்ச்சங்க தலைவர் கவிஞர் எல்லோராமணி, தேசிய செட்டியார்கள் பேரவை மாநில கவுரவ தலைவர் வக்கீல் ஜெயராமன், தலைமை நிலைய செயலாளர் ரகுபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கவிஞர் தியாரூ வரவேற்று பேசினார். பேராசிரியர் நசீமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பெஸ்ட் மணிகோல்டு நிறுவனத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News