எல்லைப்பாதுகாப்பு படைவீரர்கள் தூய்மை பணி
- கருமத்தம்பட்டி அருகே கிட்டாம்பாளையத்தில் நடைபெற்றது.
- பாதுகாப்பு படை சீப் கமாண்டர் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கருமத்தம்பட்டி,
காந்தி ஜெயந்தியைெயாட்டி, நேற்று நாடு முழுவதும் ஒரு மணி நேரம் தூய்மை பணி நடந்தது.
அதன்படி கருமத்தம்பட்டி அருகே உள்ள கிட்டாம்பாளையம் கிராமத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சார்பில் தூய்மை பணிகள் நடைபெற்றது.
இதில் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கிராம மக்களுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக எல்லை பாதுகாப்பு படையினர் 5 கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு நடந்து சென்று வழி நெடுகிலும் உள்ள முட்புதர்கள் மற்றும் காகிதங்கள் மற்றும் குப்பைகளை தரம் பிரித்து குப்பைத் தொட்டிகளில் போட்டு குப்பைகளை அகற்றினர்.
மேலும் பொதுமக்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த தூய்மை இயக்க பணியில் எல்லை பாதுகாப்பு படை சீப் கமாண்டர் கமல் கஹல்பி, டெப்டி கமெண்ட் ராத்தூர் விஷால் சர்மா, கிட்டாம்பாளையம் ஊராட்சி தலைவர் வி.எம்.சி மனோகர் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.