திருநாவலூர் அருகே நிலத்தகராறில் தம்பியை தாக்கிய அண்ணன் கைது
- திருநாவலூர் அருகே நிலத்தகராறில் தம்பியை தாக்கிய அண்ணன் கைது செய்யப்பட்டார்.
- ஏன் அதிகமாக வரப்பைக் கழிக்கிறாய் என்று கேட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கிளியூர் கங்கை அம்மன் நகரைச் சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 36). விவசாயி. இவருக்கும் இவருடைய சகோதரர் அன்னப்பன் (40), இருவருக்கும் சொந்தமான 3 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் ராஜாராமன் அவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு வரப்பை மண்வெட்டியால் கழித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அன்னப்பன் ஏன் அதிகமாக வரப்பைக் கழிக்கிறாய் என்று கேட்டுள்ளார்.
இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு அண்ணப்பன் கையில் வைத்திருந்த ஸ்பிரேயர் மிஷின் பைப்பால் ராஜாராமன் கழுத்தில் அடித்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு அங்கிருந்து பொதுமக்கள் உதவியுடன் உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ராஜாராமன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அன்னப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோக த்தையும் ஏற்படுத்தியது. மேலும், அங்கு பதட்டம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.