உள்ளூர் செய்திகள் (District)

ராபி பருவ தோட்டக்கலைப் பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு

Published On 2023-12-02 10:12 GMT   |   Update On 2023-12-02 10:12 GMT
  • தருமபுரி மாவட்டத்தில் ராபி பருவ தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது.
  • தக்காளிக்கு ரூ.1960, செலுத்தி பயிர் காப்பீடு திட்டத்தில் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிது

 தருமபுரி மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டில் புதுப்பிக்க ப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட ராபி பருவ தோட்டக்கலை ப்பயிர்களான வாழை, வெங்காயம், மரவள்ளி, தக்காளி, கத்தரி மற்றும் வெண்டை ஆகிய பயிர்க ளுக்கு காப்பீட்டு கட்டணம் செலுத்து வதற்கான காலக்கெடு நிர்ணயிக்க ப்பட்டுள்ளது.

அதன்படி வெங்காயம், கத்திரி மற்றும் தக்காளி பயிருக்கு 2024-ம் ஆண்டு ஜனவரி 31- ந்தேதியும், வெண்டை பயிருக்கு 2024- ந்ஆண்டு பிப்ரவரி 15-ந்தேதியும், வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு 2024 ம் ஆண்டு பிப்ரவரி 29-ந் தேதியும் பயிர் காப்பீடு செய்ய இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு அதிகப்பட்ச இழப்பீடாக வாழைக்கு ரூ.71600, மரவள்ளிக்கு ரூ.26250, வெங்காயத்திற்கு ரூ.34350, கத்திரிக்கு ரூ.27650, வெண்டைக்கு ரூ.17900, மற்றும் தக்காளிக்கு ரூ.39200, வழங்கப்படும்.

எனவே, விவசாயிகள் தங்கள் அருகாமையில் உள்ள பொது சேவை மையங்கள்மூலமாகவோ, தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள்மூலமாகவோ பயிர் காப்பீடு பிரீமியம் கட்டணமாக ஏக்கருக்கு வாழைக்கு ரூ.3580, மரவள்ளிக்கு ரூ.1312.51, வெங்காயத்திற்கு ரூ.1717.51 கத்திரிக்கு ரூ.1382.51, வெண்டைக்கு ரூ.895மற்றும் தக்காளிக்கு ரூ.1960, செலுத்தி பயிர் காப்பீடு திட்டத்தில் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிது.

மேலும் விவரங்கள் பெற விவசாயிகள்தங்கள் பகுதி தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுக கேட்டுக்கொ ள்ளப்படுகிறார்கள்.

Similar News