புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மா. பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
செயற்கை இரசாயன உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை முற்றிலும் தவிர்த்து, இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, இயற்கை மற்றும் அங்கக எரு பயன்படுத்துதல் மூலம் பயிர் பாதுகாப்பு மற்றும் பயிர் சாகுபடி செய்யப்படுவதோடு மண்வளத்தையும் பாதுகாப்பதே அங்கக விவசாயம் ஆகும்.
இவ்வாறு இயற்கை விவசாயம் செய்யும், அங்கக விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் "நம்மாழ்வார்" பெயரில் விருது வழங்கப்பட உள்ளது. முதல் பரிசாக, ரூ. 2.50 இலட்சத்துடன் ரூ. 10,000/- மதிப்புடைய பதக்கமும், இரண்டாம் பரிசாக, ரூ. 1.50 இலட்சத்துடன் ரூ. 7,000/- மதிப்புடைய பதக்கமும், மூன்றாம் பரிசாக, ரூ. 1.00 இலட்சத்துடன் ரூ. 5,000 மதிப்புடைய பதக்கமும் வழங்கப்படும்.
நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள் ஆதார் அட்டை நகல், சிட்டா, அடங்கல் மற்றும் அங்கக வேளாண்மை சான்றுகளுடன், உழவன் செயலி மூலமாகவோ அல்லதுஇணைய தளம் மூலமாகவோ, முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவு கட்டணமாக ரூ. 100/- மட்டும் அரசுக் கணக்கில் செலுத்தி, 30.11.2023 விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, தங்கள் வட்டார வேளாண்மைத் துறை அலுவலர்களைத் தொடர்பு கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார்