உள்ளூர் செய்திகள்

உதயநிதி ஸ்டாலின்

சின்னவர் என்றே என்னை அழைக்கலாம்- திமுகவினருக்கு உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை

Published On 2022-06-26 18:30 GMT   |   Update On 2022-06-26 18:30 GMT
  • மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் என்று என்னை அழைக்க வேண்டாம்.
  • கலைஞர் என்றால் அது ஒரே ஒரு கலைஞர் தான்.

புதுக்கோட்டை தி.மு.க. சார்பில் உசிலங்குளம் தடி கொண்ட அய்யனார் திடலில் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அக்கட்சியின் இளைஞர் அணி மாநில செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழிகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் கடந்த 3 தேர்தல்களில் தி.மு.க. கூட்டணிக்கு தமிழக மக்கள் மிகப்பெரிய வெற்றியை தந்தார்கள். இந்தியாவிலேயே 3-வதாக பெரிய இயக்கமாக தி.மு.க. உள்ளது. கட்சியின் அடிமட்ட தொண்டர்களையும், மூத்த நிர்வாகிகளையும் அண்ணா, பெரியாரின் மறு உருவமாக நான் பார்க்கிறேன்.

கட்சியில் உள்ள அனைவருக்கும் ஒரு அன்பு வேண்டுகோள். என் மீது பாசம், அன்பு காட்டுவதாக நினைத்துக்கொண்டு கோஷம் போடும் போது 3-ம் கலைஞர், இளம் தலைவர் என அப்படியெல்லாம் அழைக்கிறீர்கள். எனக்கு இதில் துளிக்கூட விருப்பம் கிடையாது.

கலைஞர் என்றால் அது ஒரே ஒரு கலைஞர் தான். என்னை சின்னவர் என்று அழைக்கிறார்கள். அது மகிழ்ச்சியாக உள்ளது. பெரியவர்களோடு ஒப்பிடும் போது நான் சின்னவர் தான். இந்த திடலில் இதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சிகளில் பேசிய இந்திரா காந்தி பிரதமரானார், கருணாநிதி பல வெற்றிகளை கண்டுள்ளார், மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனார்.

இந்த திடல் ராசியான திடல் என்று எனக்கு முன்னால் பேசியவர்கள் சொன்னார்கள். எனக்கு ராசி மீது நம்பிக்கை கிடையாது. உழைப்பின் மீது நம்பிக்கை உண்டு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News