உள்ளூர் செய்திகள்

கம்பைநல்லூர் ஸ்ரீ ராம் கல்வி குழும பள்ளி ஆண்டு விழா

Published On 2023-02-13 09:56 GMT   |   Update On 2023-02-13 09:56 GMT
  • சிறுவயதில் ஏழ்மை நிலையில் இருந்த இப்பள்ளியின் தாளாளர் எம்.வேடியப்பன் தனது அயராத உழைப்பாலும் உயர்ந்தவர்.
  • மாணவ, மாணவிகள் உங்களுடைய இலக்கை குறி வைத்து நீங்கள் வெற்றி பெற வேண்டும்

மொரப்பூர்,

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளி 10 -ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ஸ்ரீராம் கல்வி குழுமங்களின் நிறுவனர் எம்.வேடியப்பன் தலைமை வகித்தார்.

ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வே.சாந்தி வேடியப்பன் குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் சின்னப்பகவுண்டர், கம்பைநல்லூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் மாசிலாமணி, கம்பை நல்லூர் பேரூராட்சி தலைவர் த.வடமலை முருகன், கம்பைநல்லூர் பேரூராட்சி துணைத்தலைவர் சா.மதியழகன், ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீராம் கல்வி குழுமங்களின் நிர்வாக இயக்குனர் த.பவானி தமிழ்மணி வரவேற்று பேசினார்.

இவ்விழாவில் விஜய் டி.வி.யின் நீயா, நானா புகழ் சி.கோபிநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

சிறுவயதில் ஏழ்மை நிலையில் இருந்த இப்பள்ளியின் தாளாளர் எம்.வேடியப்பன் தனது அயராத உழைப்பாலும், நேர்மையாலும், எளிமையான நட்பாலும் இன்றைக்கு மாநில அளவில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைக்கும் இப்பள்ளியை உருவாக்கி உள்ளார்.

பள்ளி வாழ்க்கை தான் மாணவ, மாணவிகளின் மறக்க முடியாத நாட்க ளாகும். பள்ளி நிர்வாகம், ஆசிரிய, ஆசிரியர்கள், நண்பர்கள் என அனைவரும் நீண்ட காலம் மனதில் இருப்பார்கள். எனவே உங்களுடைய இலக்கை குறி வைத்து நீங்கள் வெற்றி பெற வேண்டும் என இந்த நேரத்தில் நான் உங்களை வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில் காரிமங்கலம் பேரூராட்சி தலைவரும், பி.சி.ஆர். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளருமான பி.சி.ஆர்.மனோகரன், தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாக அலுவலரும், எஸ்.எஸ்.எஸ். நகை கடை அதிபருமான சி.சக்திவேல், திருவண்ணாமலை சீனிவாசன்,சேலம் அசோக்குமார்,காஞ்சிபுரம் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதனை தொடர்ந்து பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ், வெற்றிவேல் ஆகியோர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளின் முன்னேற்ற அறிக்கையினை வாசித்தார்கள்.

முடிவில் ஸ்ரீ ராம் கல்வி குழுமங்களின் நிர்வாக இயக்குநர் ஆர். சன்மதி ராஜாராம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News