பனங்குடியில் தொடர் மின்தடை சரிசெய்யப்படுமா?
- இரவு நேரங்களில் அடிக்கடி தொடர் மின் தடை ஏற்படுகிறது.
- மின் பாதையில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமரு கல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதிக்கு திட்டச்சேரி துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி தொடர் மின் தடை ஏற்படுகிறது.
பல மணி நேரம் தொடரும் மின் தடையால் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவியர்கள்,முதியவர்கள், நோயாளிகள், பொதுமக்கள் என பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குத்தாலத்திலிருந்து பனங்குடி வரை காரை மேடு வழியாக மின் விநியோகம் செய்யப்படும் மின் பாதையில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து மின்கம்பிகளின் மீது படர்ந்து கிடப்பதால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகவும் அதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்