உள்ளூர் செய்திகள்

மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை

Published On 2023-04-22 10:06 GMT   |   Update On 2023-04-22 10:06 GMT
  • அக்கரைப்பட்டி முனியப்பனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
  • விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

தருமபுரி,

தருமபுரி குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த 13-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து இடும்பன் பூஜையும், அக்கரைப்பட்டி முனியப்பனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பின்னர் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுதலும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிம்ம வாகனத்தில் மேளதாளங்கள் முழங்க அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் கடைசி நிகழ்ச்சியான நேற்று மறு பூஜை நடைபெற்றது.

இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரவு ஏராளமான பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. அப்போது அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது சாமிக்கு சிறப்பு பூஜையும், மகா தீபாரதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செங்குந்தர் சமூகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News