உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகில் மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் தினேஷ்குமார் ஆகியோர் ஆய்வு நடத்திய காட்சி.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மாநகராட்சி சார்பில் உணவுக்கூடம் - மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

Published On 2023-07-23 08:36 GMT   |   Update On 2023-07-23 08:36 GMT
  • மாநகராட்சி சார்பில் ஓய்வு அறையுடன் கூடிய உணவு கூடம் அமைத்து தருமாறு மருத்துவமனைக்கு வரும் மக்கள் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
  • பழைய மாநகராட்சி முன்பிருந்து தருவை மைதான ரோடு வரை உள்ள மாநகராட்சி தெற்கு காட்டன் ரோடு பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளை மேயர் பார்வையிட்டு பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி அரசு மருத்துவமனை நுழைவு வாயிலின் அருகில் மாநகராட்சி சார்பில் ஓய்வு அறையுடன் கூடிய உணவு கூடம் அமைத்து தருமாறு மருத்துவமனைக்கு வரும் மக்கள் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

உணவுக்கூடம்

இதனை தொடர்ந்து அந்த பகுதியினை கமிஷனர் தினேஷ்குமாருடன் நேரில் சென்று பார்வையிட்டு மேயர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த பொதுமக்களிடம் இங்கு ஓய்வு அறையுடன் கூடிய உணவு கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து பழைய மாநகராட்சி முன்பிருந்து தருவை மைதான ரோடு வரை உள்ள மாநகராட்சி தெற்கு காட்டன் ரோடு பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளை மேயர் பார்வை யிட்டு பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.

கலந்து கொண்டவர்கள்

ஆய்வின்போது முன்னாள் கவுன்சிலரும், வட்ட செயலாளருமான ரவீந்திரன், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாநகர கவுன்சிலர்கள் ரெக்ஸ்லின், எடின்டா, திரிக்டா, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர், மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர் மச்சாது மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News