விழுப்புரம் அருகே பஞ்சாயத்து தலைவர் மீது கொடூர தாக்குதல்: 12 பேர் மீது வழக்கு
- விழுப்புரம் அருகே பஞ்சாயத்து தலைவர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலால் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி ஜெய்சங்கர் ஆதரவாளர்கள் சேகர் ஆதரவாளர்களை தாக்கியதாக தெரிகிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே மயிலம் போலீஸ் சரகம் கேணிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசங்கர் . அவரது மனைவி புவனேஸ்வரி(42). இவர் நேற்று தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை நடைபெற்றதை பார்வையிட்டுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சேகர் மனைவி இந்துமதி(30), 100 நாள் வேலைக்கு வரும்போது எந்தவித உபகரணங்கள் இன்றி வந்துள்ளார். இதனை ஊராட்சி மன்ற தலைவர் வேலை செய்ய உபகரணங்கள் எடுத்துவரவில்லையா எனகேட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு, மோதலாக மாறியது. இதில் பஞ்சாயத்துதுணை தலைவர் சேகர், அவரின் மனைவி இந்துமதி ஆதரவாளர்கள் பஞ்சாயத்து தலைவரை தாக்கினர். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி ஜெய்சங்கர் ஆதரவாளர்கள் சேகர் ஆதரவாளர்களை தாக்கியதாக தெரிகிறது. இதனால் இரு தரப்பினரும் மயிலம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் பஞ்சாயத்து தலைவர் புவனேஸ்வரி கொடுத்து புகாரின் பேரில்ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சேகர்அவரது மனைவி இந்துமதிஆதரவாளர்கள் கார்த்திகேயன், பிரபாகரன், மோகன், சஞ்சய், கோபாலகிருஷ்ணன், ஏழுமலை, முனியப்பன் ஆகிய 9 பேர் மீதும், ஊராட்சி மன்ற துணை தலைவர் இந்துமதி அளித்த புகாரின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி, அவரது கணவர் ஜெயசங்கர் மற்றும் செந்தில் ஆகிய மூன்று பேர் மீதும் மொத்தம் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.