சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும்-பட்டியலின உரிமை பாதுகாப்பு இயக்கம் தீர்மானம்
- கருத்தரங்கில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. தங்கவேலு உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் பட்டியலின உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் பட்டியலின பாதுகாப்பு உரிமை கருத்தரங்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன் தலைமை தாங்கினார். தேவேந்திரகுல வேளாளர் சமுதாய கூட்டமைப்பு ஊர்க்காவலன், தியாகி இம்மானுவேல் பேரவை பொதுச் செயலாளர் வேல்முருகன், ஐந்திணை மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், தமிழக மக்கள் கட்சி மாநில செயலாளர் தனராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி பட்டியலின மக்கள் தொகைக்கு ஏற்பட்ட இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. தங்கவேலு, முன்னாள் மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் துரை.ஜெயச்சந்திரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சுகந்தி, அகில இந்திய செயலாளர் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வர் ராமகுரு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தென்காசி மாவட்ட செயலர் கிருஷ்ணமூர்த்தி, பட்டியல் இன உரிமை பாதுகாப்பு இயக்கம் கண்ணன் ஆகியோர் பங்கேற்று இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி பேசினர். இதில் தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி, அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பட்டியலின உரிமை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் அசோக்ராஜ் வரவேற்று பேசினார். நடராஜன் நன்றி கூறினார்.