உள்ளூர் செய்திகள்
கொள்முதல் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமரா அமைக்க வேண்டும்
- குறுவை நெல் அறுவடை செய்யப்பட்டு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
- சில கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கமிஷன் வாங்கப்படுகிறது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம் தலைவர் வழக்கறிஞர் நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
திருவாரூர் மாவட்டம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெருமளவில் குறுவை நெல் அறுவடை செய்யப்பட்டு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது.
உடனடியாக நெல் கொள்முதல் செய் யாமல் இரண்டு நாட்கள் காலதாமதமாகிறது.
நெல் ஈரப்பதமும் அதிகமாகிறது.
மேலும் சில கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கமிஷன் வாங்கப்படுகிறது.
இது சம்பந்தமாக விவசாயிகளிடமிருந்து மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையத்திற்கு புகார் வந்துள்ளது.
எனவே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் ரெக்கார்டிங் வசதியுடனும் பொருத்தி நெல் மூட்டைக்குகமிஷன் பெறும் செயலை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.