திருச்செந்தூர் கோவிலில் மத்திய மந்திரி எல்.முருகன் தரிசனம்
- 5 மணி அளவில் கோவிலுக்கு சென்று சத்ரு சம்கார மூர்த்தி சுவாமி சன்னதியில் தரிசனம் செய்தார்.
- சுவாமி மூலவர், சண்முகரை வழிபட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
திருச்செந்தூர்:
மத்திய இணை மந்திரி எல். முருகன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று நெல்லை வந்தார்.
இந்நிலையில் எல். முருகன் இன்று காலையில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.
அதிகாலை 5 மணிக்கு அவர் கோவிலுக்கு சென்று சத்ரு சம்கார மூர்த்தி சுவாமி சன்னதியில் தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் வெளிபிரகாரத்தில் ஆனந்த விலாசம் மண்டபத்தில் நடைபெற்ற சத்ரு சம்கார மூர்த்தி சிறப்பு யாகத்தில் கலந்து கொண்டார்.
பின்னர் மீண்டும் கோவிலுக்குள் சென்று சத்ரு சம்கார மூர்த்தி சாமி சன்னதியில் அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். பின்னர் அவர் சுவாமி மூலவர், சண்முகரை வழிபட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
அப்போது பா.ஜ.க. மாவட்ட பொதுச் செயலாளர் சிவமுருக ஆதித்தன், மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், சிறுபான்மை பிரிவு அணி தலைவர் ஸ்டீபன் லோபோ, ஆலய மேம்பாட்டு பிரிவு செயலாளர் வினோத், நகர செயலாளர் நவ மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.