உள்ளூர் செய்திகள் (District)

ஊத்தங்கரை அண்ணா சாலையில் மாணவ,மாணவிகள் ஊர்வலமாக சென்ற காட்சி.

சந்திராயன்-3 வெற்றி அதியமான் கல்வி நிறுவன மாணவ, மாணவிகள் கொண்டாட்டம்

Published On 2023-08-25 10:07 GMT   |   Update On 2023-08-25 10:07 GMT
  • மாணவர்கள் தங்களுக் கிடையே இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர்.
  • 5000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மத்தூர்,  

நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தைத் தரையிறக்கிய முதல் நாடு இந்தியா என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தது . இந்தியாவிற்குப் பெருமையைத் தேடித் தந்த சந்திராயன்-3 விண் கலத்தின் லேண்டர் சாதனம் மாலை நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

இந்த நிகழ்வை அதியமான் கல்வி நிறுவனங்களில் நேரலையில் மாணவ- மாணவிகள் கண்டு களித்தும், கைத்தட்டியும், தேசியக் கொடியைக் அசைத்தும் கொண்டாடினர். மாணவர்கள் தங்களுக் கிடையே இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர்.

இந்தியாவின் இவ்வு யரிய சாதனையைப் பெருமைப் படுத்தும் வகையில், அதியமான் கல்வி நிறுவனங்களின் சார்பாக ஊத்தங்கரை அண்ணா சாலையில் இருந்து ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் அதியமான் பப்ளிக் பள்ளி மற்றும் அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அதியமான் மகளிர் கல்வி யியல் கல்லூரியில் இருந்து 5000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன் தலைமையில், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி. திருமால்முருகன், செயலர் ஷோபா திருமால் முருகன், நிர்வாக அலுவலர் சீனி கணபதிராமன், பப்ளிக் பள்ளி முதல்வர் லீனா ஜோஸ், மெட்ரிக் பள்ளி முதல்வர் கலைமணி சரவணகுமார், துணை முதல்வர் அபிநயா கணபதிராமன், அதியமான் மகளிர் கல்வியியல் கல்லூரி முனைவர் மணிமேகலை ஆகியோர் போலீஸ் ஆய்வாளர் பார்த்திபன் முன்னிலையில் கொடி அசைத்து வெற்றிவிழா பேரணியைத் துவக்கி வைத்தனர்.

இந்தியாவின் சாத னையை, இஸ்ரோ விஞ்ஞானி களின் அர்ப்பணிப்பு மற்றும் அயராத உழைப்பை அவர்க ளின் வெற்றியை மாணவ மாணவிகள் முழக்கங்களாக முழங்கி பேரணியாக சென்றனர்.

சந்திராயன்-3 வெற்றி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியிடையே பெரும் நம்பிக்கையையும், பேரெழுச்சியையும் உருவாக்கி உள்ளது. மாணவ-மாணவிகள் தன்னெ ழுச்சியாக இந்தியாவின் வலிமை யையும், பெருமையையும் பரைசாற்றிச் சென்றனர். இது ஆரம்பம் முடிவல்ல. இனி வரும் காலங்களில் உலகம் வியக்கும் வண்ணம் இந்திய இளைஞர்கள், விஞ்ஞானிகள் அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துவர் என்பதினை உணர முடிந்தது.

இவ்வெற்றி விழா பேரணி மக்களிடையே பெரும் விழிப்புணர்வையும், இந்தி யாவின் மீதான அவர்களின் நம்பிக்கையையும் வலுப்பெறச் செய்துள்ளது. 

Tags:    

Similar News