உள்ளூர் செய்திகள்

சேந்தங்குடி கோவில்களில் தேரோட்டம் நடந்தது.

சேந்தங்குடி அமர்ந்தாளம்மன்- துர்கா பரமேஸ்வரி கோவில்களில் தேரோட்டம்

Published On 2023-04-08 08:12 GMT   |   Update On 2023-04-08 08:12 GMT
  • தினமும் அம்மன் வீதிஉலா நடைபெற்று வந்தது.
  • மாவிளக்கு தீபம் ஏற்றி பழ வகைகளை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியில் உள்ள அமர்ந்தாளம்மன், துர்கா பரமேஸ்வரி கோவிலில் பங்குனி உற்சவ திருவிழா கடந்த மாதம் 22-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

தொடர்ந்து, தினமும் அம்மன் வீதிஉலா நடைபெற்று வந்தது.

விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இதையொட்டி, அமர்ந்தாளம்மன் மற்றும் துர்கா பரமேஸ்வரி இருவரும் 2 தேர்களில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது.

ஒவ்வொரு வீட்டு வாசலிலும், மண்ணினால் மேடை அமைத்து அதில் மாவிளக்கு தீபம் ஏற்றி பழ வகைகளை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

விழாவில் டாக்டர் குரு குடும்பத்தார்கள், முத்துகுமாரசாமி, ரமேஷ், விழா குழுவினர்கள், குலதெய்வ குடும்பத்தார்கள், தெருமக்கள், இளைஞர் மன்றத்தினர் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News