தேனி அருகே போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி செய்தவருக்கு சிறை
- பொய்யான ஆவணம் தயாரித்து இந்த இடம் விற்கப்பட்டதாக தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
- நிலமோசடியில் ஈடுபட்டவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3ஆயிரம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
தேனி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள அய்யனதேவன்பட்டியை சேர்ந்த காசிமாயன் என்பவர் தனது தந்தை பெயரில் இருந்த சொத்தை அதேபகுதியை சேர்ந்த பாஸ்கரன் மற்றும் அவரது வாரிசுகளுடன் சேர்ந்து பஸ்நிலையம் அருகில் உள்ள சின்னத்துரை என்பவருக்கு கிரையம் செய்து விற்றார். ஆனால் பொய்யான ஆவணம் தயாரித்து இந்த இடம் விற்கப்பட்டதாக தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தேனி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிபதி முன்னிலையில் விசாரிக்கப்பட்டு நிலமோசடியில் ஈடுபட்டவருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.3ஆயிரம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு மாத கால சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது.
இவ்வழக்கில் அரசு தரப்பு வக்கீல் நிர்மலாதேவி, சிறப்பாக விசாரணை செய்த முன்னாள் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின்மும்தாஜ் மற்றும் போலீசார் ஆகியோரை தேனி மாவட்ட எஸ்.பி பிரவீன் உமேஷ்டோங்கரே பாராட்டினார்.