உள்ளூர் செய்திகள் (District)

செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

Published On 2022-07-26 09:12 GMT   |   Update On 2022-07-26 09:12 GMT
  • பரிசளிப்பு விழா வாசகர் வட்ட பொருளாளர் ரோட்டரியன் யோகா டவர்ஸ் சேகர் தலைமையில் நடைபெற்றது.
  • ஓவியப்போட்டியில் மாணவர்கள் கார்த்திகேயன், கமலேஷ், மாணவி சுஷ்மிதா ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.

தென்காசி:

பள்ளிக்கல்வித்துறை, வ.உ.சி வட்டார நூலகம், ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சாரல் இணைந்து 44-வது செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வினை பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஸ்லோகன் எழுதுதல், பேச்சுப்போட்டி தென்காசி வ.உ.சி வட்டார நூலகத்தில் நடத்தப்பட்டது. இதில் 310 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

முதல் மூன்று பரிசுகள் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா வாசகர் வட்ட பொருளாளர் ரோட்டரியன் யோகா டவர்ஸ் சேகர் தலைமையில் நடைபெற்றது.

வட்டார நூலகர் பிரமநாயகம் வரவேற்றார். ரோட்டரியன் லெட்சுநாராயணன் முன்னிலை வகித்தார். வெற்றி பெற்றவர்களுக்கு கேடயமும், சான்றிதழும் வழங்கி ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சாரல் தலைவர் மாரிமுத்து, செயலாளர் ரமேஷ் விழா பேரூரை ஆற்றினர். விழாவில் வட்டார கல்வி அலுவலர் இளமுருகன், மின்வாரிய செயற்பொறியாளர்அருள் வாழ்த்துரை வழங்கினர். கிளை நூலகர் சுந்தர் நன்றி கூறினார்.

ஓவியப்போட்டியில் பண்பொழி ஆர்.கே.வி. நடுநிலைப் பள்ளி மாணவன் கார்த்திகேயன் முதல்பரிசும், தென்காசி 13-வது வார்டு நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவன் கமலேஷ் இரண்டாம் பரிசும், தென்காசி இசக்கி வித்யாரம் பள்ளி மாணவி ஏ.சுஷ்மிதா மூன்றாம் பரிசும், கட்டுரைப்போட்டியில் நெடுவயல் ஸ்ரீ சிவசைலநாத நடுநிலைப் பள்ளி மாணவி மகேஸ்வரி முதல் பரிசும், குற்றாலம் டி.கே.டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பவிஷா இரண்டாம் பரிசும், இலஞ்சி பாரத் வித்யா மந்திர் சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவி கங்காலெட்சுமி மூன்றாம்பரிசும், ஸ்லோகன் எழுதுதல் போட்டியில் இலஞ்சி பாரத் வித்யா மந்திர் சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவிகள் ஜீவிகா முதல் பரிசும், தீபிகா இரண்டாம் பரிசும், அனுபாரதி மூன்றாம் பரிசும், பேச்சுப்போட்டியில் குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி மாணவி ராபிகா, இல்லம்தேடிகல்வி தன்னார்வலர் நல்லமங்கை ஆகியோர் பரிசு பெற்றனர். கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News