உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவர்களை படத்தில் காணலாம்.

சதுரங்கப் போட்டிகளில் தருமபுரி தொன்போஸ்கோ கல்லூரி மாணவர்கள் சாதனை

Published On 2022-11-22 10:03 GMT   |   Update On 2022-11-22 10:03 GMT
  • சதுரங்கப்போட்டிகள் சேலம், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
  • தேசிய அளவில் நடைபெறும் சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்க தகுதியும் பெற்றிருக்கிறார்கள்.

தருமபுரி,

பெரியார் பல்கலைக் கழகக்கல்லூரிகளுக்கு இடை யேயான சதுரங்கப்போட்டிகள் சேலம், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்ட ங்களைச் சேர்ந்த 25 அணிகள் இப்போட்டிகளில் பங்கு பெற்றன. மொத்தம் ஏழு சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் தருமபுரி, தொன்போஸ்கோ கல்லூரி அணிமுதலிடம் பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்றிருக்கிறது.

இதில் முதுநிலை கணிதம் இரண்டாம் ஆண்டு மாணவர் விக்னேஷ் முதலிடம் பெற்று தனிநபர் கோப்பையை வென்றார். முதுநிலை கணிதம் இரண்டாம் ஆண்டு மாணவர் சிலம்பரசன் ஆறாவது இடத்தில் வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்ற மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்க தகுதியும் பெற்றிருக்கிறார்கள்.

வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பேராசிரியர் சேவியர் டெனிஸ் ஆகியோரைக் கல்லூரி செயலர் எட்வின் ஜார்ஜ், முதல்வர் ஆஞ்சலோ ஜோசப், துணை முதல்வர் பாரதி பெர்னாட்ஷா, பொருளாளர் ஜான், சமூகப் பணித்துறைப் பேராசிரியர் ஆண்டனி கிஷோர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News