உள்ளூர் செய்திகள்

நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கர்ப்பிணிகள் வசதிக்காக வீல் சேர் , மருத்துவ உபகரணங்களை ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார். அருகில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி மற்றும் பலர் உள்ளனர்.


கல்வியிலும், மருத்துவத்திலும் முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்தி வருகிறார் - சங்கரன்கோவில் விழாவில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேச்சு

Published On 2022-11-27 09:00 GMT   |   Update On 2022-11-27 09:00 GMT
  • நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி ஏற்பாட்டில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
  • உதயநிதி எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

தங்க மோதிரம்

வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். 15-வது வார்டில் வார்டு செயலாளர் வீராசாமி ஏற்பாட்டில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மாவட்ட துணை செயலாளர் புனிதா ஏற்பாட்டில் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கர்ப்பிணிகள் வசதிக்காக வீல் சேர் வழங்கும் நிகழ்ச்சியும், பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம், சுகர் போன்றவைகள் கண்டறியும் கருவிகள் வழங்கப்பட்டது.

மேலும் சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி ஏற்பாட்டில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணி விக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சங்கரன் கோவில் டி.டி.டி.ஏ. சிறப்புப் பள்ளியில் கணேசன், ராஜவேல், முருகன், முத்து மணிகண்டன் ஏற்பாட்டில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சியை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

சீருடைகள்

அதைத்தொடர்ந்து அம்பேத்கர் நகர் பகுதியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினர் சங்கர் ஏற்பாட்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், சீருடைகள் வழங்கப்பட்டது.

அப்போது ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

உதயநிதி எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வி மற்றும் மருத்துவத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இல்லம் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, பள்ளி மேலாண்மை குழு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட கல்வியை மீட்டெடுக்க முதல்-அமைச்சர் அயராது உழைத்து வருகின்றார். மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசி னார்.

கலந்து கொண்டவர்கள்

இதில், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், மாவட்ட பிரதிநிதி டைட்டஸ் ஆதித்தன், முத்துக்குமார், அவைத் தலைவர் முப்புடாதி, நகர துணை செயலாளர்கள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், சுப்புத்தாய், முத்துக்குமார் பொருளாளர் லாசர் மற்றும் ரமேஷ், வைரவேல், கிளைச் செயலாளர் முருகராஜ், சதீஷ் செல்வராஜ் ஆதி நகராட்சி கவுன்சிலர்கள் ராமு விஜயகுமார், வேல்ராஜ் ராஜா, ஆறுமுகம், மாவட்ட நெசவாளர் அணி சோம செல்வ பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி பத்மநாபன், இளைஞர் அணி சரவணன், மாணவர் அணி கார்த்தி, அப்பாஸ் அலி, உதயகுமார், அஜய் மகேஷ் குமார், வார்டு செயலாளர்கள் தடிகாரன், விக்னேஷ், வீரமணி சுரேஷ், வெள்ளத்துரை, சரவணன் மற்றும் கார்த்தி குட்டி, செல்வம், அன்சாரி, மாவட்ட சிறுபான்மை பிரிவு யோசேப்பு, முருகன், ஜெயக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News