முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்- மாநகராட்சி பள்ளியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
- 3 மாநகராட்சி பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு திட்டம் குறித்து அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
- ஆய்வின்போது கலெக்டர் செந்தில்ராஜ், கமிஷனர் தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் 1-ம் வகுப்பு முதல் 5-ம்வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியான ஜின் பேக்டரி ரோடு, சிவந்தாகுளம், தெற்கு புதுத்தெரு ஆகிய 3 மாநகராட்சி பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு திட்டம் குறித்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
இத்திட்டத்தில் 3 மாநகராட்சி பள்ளி களில் மொத்தம் 905 பள்ளி குழந்தைகள் பயன்பெறுகின்றனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ், கமிஷனர் தினேஷ்குமார், துணை ஆணையர் குமார், பொறுப்பு செயற்பொறியாளர் சரவணன், ஸ்மார்ட் திட்ட பொறியாளர் சந்திரமோகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, தாசில்தார் செல்வகுமார், கவுன்சிலர்கள் பொன்னப்பன், மும்தாஜ், பாப்பாத்தி, முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்குமார், பாலசுப்பிரமணியன் மற்றும் ஜீவன் ஜேக்கப் மணி, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, தலைமை ஆசிரியர்கள் பீரிடா, தங்கமணி, எமல்டா வெலன்சியா ஹெசியா, சுகாதார ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.