உள்ளூர் செய்திகள்

காேப்புபடம்

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார பயணம்

Published On 2022-06-16 08:17 GMT   |   Update On 2022-06-16 08:17 GMT
  • அவிநாசியில், விழிப்புணர்வு பிரசார பயணம் நடைபெற்றது.
  • ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய குழுத்தலைவர் ஜெகதீசன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

அவிநாசி

சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து, அவிநாசியில், விழிப்புணர்வு பிரசார பயணம் நடைபெற்றது.சமூகக்கல்வி மற்றும் முன்னேற்ற மையம் (சி.எஸ்.இ.டி.,), திருப்பூர் சைல்டுலைன் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆகியன இணைந்து, வளரிளம் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கான இலவச தொலைபேசி உதவி எண் 1800 425 1092 மற்றும் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி உதவி எண் 1098 குறித்த விழிப்புணர்வு வாகன பிரசார பயணம் அவிநாசியில் துவங்கியது.ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய குழுத்தலைவர் ஜெகதீசன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

தொடர்ந்து பழங்கரை, புதுப்பாளையம், வேலாயுதம்பாளையம் சேவூர், கருவலூர், தெக்கலூர், பகுதிகளில் பிரசார பயணம் நடைபெறுகிறது.இதில் சி.எஸ்.இ.டி., திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சரவணக்குமார், கருணாம்பிகை, நயினான், சின்னச்சாமி, சி.எஸ்.இ.டி., சைல்டுலைன் அமைப்பின் வைஷ்ணவி மற்றும் களப்பணியாளர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News