குழந்தைகளை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் வளர்க்க வேண்டும் - ராஜா எம்.எல்.ஏ. பேச்சு
- புதுமண தம்பதிகளுக்கான கருத்தரங்கம் சங்கரன்கோவிலில் நடந்தது.
- சத்தான உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் பொது வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் புதுமண தம்பதிகளுக்கான கருத்தரங்கம் சங்கரன்கோவிலில் நடந்தது. குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுமதி தலைமை தாங்கினார்.
குழந்தை பராமரிப்பு
தொடர்ந்து மருத்துவ அலுவலர்கள் மகாலட்சுமி மற்றும் சூர்யா ஆகியோர் புதுமண தம்பதிகளுக்கு பாது காப்பான தாய்மை, கர்ப்பகால பராமரிப்பு, தாய்ப்பாலின் நன்மைகள், குழந்தை பராமரிப்பு, மகப்பேறு நலஉதவி திட்டங்கள் மற்றும் ஒரு குழந்தையின் முதல் 1,000 நாட்கள் வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கினர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதன்மையாக குழந்தைகளின் ஊட்டச்சத்து அதிகரிக்க வேண்டும் எனும் முனைப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். புதுமணத் தம்பதிகள், பெண்கள் கருவுற்று இருக்கும் நிலையில் இப்பொழுது இருந்தே தாய் ஆரோக்கியம் மற்றும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க வேண்டும்.
ஊட்டச்சத்து குறைபாடு
குழந்தைகளை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் வளர்க்க வேண்டும் இதற்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அதிகாரிகள், அலுவலர்கள் வழங்கும் ஆலோசனைகளை கேட்டு நல்ல சத்தான உணவுகளை உட்கொண்டு நீங்களும், உங்கள் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சங்கர், மாணவரணி வீரமணி, வக்கீல் சதீஷ், ஜான் ஜெயக்குமார் மேற்பார்வை யாளர்கள் மல்லிகா, செல்வம், ராஜே ஸ்வரி, குழந்தை நல பணி யாளர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் பலர் கலந்து கொண்டனர்.