தருமபுரியில் குழந்தைகளுக்கான நடைப்பயணம்- விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
- தருமபுரி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகளுக்கான நடைப்பயணம் மற்றும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- குழந்தைகள் தினத்தையொட்டி தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைைமையில் அதிகாரிகள் உறுதிெமாழியினை ஏற்றுக் கொண்டனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகள் தினத்தை சிறப்பிக்கும் வண்ணம் குழந்தைகளுக்கான நடைப்பயணம் மற்றும் விழிப்புணர்வு பேரணி யினை மாவட்ட கலெக்டர் சாந்தி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சமூகப் பாதுகாப்புத்து றையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம், நவம்பர் 19 உலக குழந்தைகள் துஷ்பிரயோகம் தடுப்பு மற்றும் நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினம் ஆகிய தினங்களை சிறப்பிக்கும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளுடன் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற குழந்தைகளுக்கான நடை பயணம் மற்றும் விழிப்புணர்வு பேரணி யினை மாவட்ட கலெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
இப்பேரணியானது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி தருமபுரி- சேலம் பிரதான சாலை வழியாக பாரதிபுரம் வரை சென்று மீண்டும் அதேவழியாக இலக்கியம்பட்டியில் முடிவடைந்தது.
முன்னதாக, மாவட்ட அலுவலகத்தில் குழந்தைகள் தின உறுதிமொழி கலெக்டர் கி.சாந்தி, தலைமையில் ஏற்கப்பட்டது.
இந்நிகழ்வுகளின் போது மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஐ.ஜோதிசந்திரா, சமூகநல அலுவலர் பவித்ரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ம.செல்வம் மற்றும் அனைத்து துறை அலுவ லர்கள் கலந்துக்கொண்டனர்.