உள்ளூர் செய்திகள்

பூம்புகாரில் சித்திரை முழு நிலவு விழா நடைபெற்றது.

பூம்புகாரில், சித்திரை முழு நிலவு விழா

Published On 2023-05-06 10:20 GMT   |   Update On 2023-05-06 10:20 GMT
  • நேற்றிரவு சித்திரை முழு நிலவு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
  • விழாவில் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத்தலமான பூம்புகாரில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று சித்திரை முழு நிலவு விழா (இந்திர விழா) நடைபெறுவது வழக்கம்.

பன்னெடுங்காலமாக நடைபெற்று வந்த இவ்விழா மழைக்கு தலைவனான இந்திரனை வணங்குவதாக ஐதீகம். பண்டைய காலத்தில் இவ்விழா தடைபட்டதால் பூம்புகார் கடல் கோளால் அழிந்ததாகவும் வரலாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன.

அதனைத் தொடர்ந்து அரசின் சார்பாக நடைபெற்று வந்த இந்திர விழா பல ஆண்டுகளாக தடைபட்டு இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்திர திருவிழாவை நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி நேற்று இரவு சித்திரை முழு நிலவு (இந்திர திருவிழா) வெகு விமர்சையாக நடைபெற்றது.

கொற்றவை பந்தலின் அருகே நடைபெற்ற விழாவில் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவிற்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார், ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், திமுக பொதுக்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன் முன்னிலை வகித்தனர்.

மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செ ல்வம் ஆகியோர் பங்கேற்று சிறப்புறை யாற்றினர்.

தப்பாட்டம்,நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, கிராமிய ஆடல் பாடல் நிகழ்ச்சி, சிலப்பதிகார நாட்டிய நாடகம், பொம்மலாட்ட கலைஞர்களின் சிலப்பதிகார கதை உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மக்கள் பிரதிநிதிகள் மற்றும் திரளான சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட அனைத்து கலைஞர்களுக்கும் சான்றிதழ்களுடன் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News