உள்ளூர் செய்திகள்

நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள கல்லறைகளில் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்து வழிபட்ட காட்சி.

நெல்லையில் இன்று கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை

Published On 2023-11-02 09:16 GMT   |   Update On 2023-11-02 09:16 GMT
  • உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் நவம்பர் 2-ந்தேதியை இறந்தவர்களின் ஆன்மாக்க ளின் நினைவு நாளை கல்லறை திருநாளாக கடை பிடிக்கிறார்கள்.
  • இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில் கிறிஸ்தவ மக்கள் காலை யிலேயே தங்களது உறவி னர்களின் கல்லறைகளுக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

நெல்லை:

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் நவம்பர் 2-ந்தேதியை இறந்தவர்களின் ஆன்மாக்க ளின் நினைவு நாளை கல்லறை திருநாளாக கடை பிடிக்கிறார்கள்.

கல்லறை திருநாள்

இந்த நாளில் இறந்துபோன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு கல்லறைகளில் மலர் அஞ்சலி செலுத்துவா ர்கள். இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில் கிறிஸ்தவ மக்கள் காலை யிலேயே தங்களது உறவி னர்களின் கல்லறைகளுக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

கிறிஸ்தவ மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பாளையில் கல்லறை திருநாளை யொட்டி சீவலப்பேரி கல்லறை தோட்டத்தில் அவர்களது உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் கல்லறையை சுத்தம் செய்து மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவினர். பின்னர் அவர்களுக்கு பிடித்த உணவு பொருட்கள் உள்ளிட்டவை களை படைத்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் கல்லறை தோட்டம் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் முன்னோர்கள் நினைவாக சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. மாநகரில் பாளை, என்.ஜி.ஓ. காலனி, தச்சநல்லூர், சந்திப்பு, டவுன் உள்ளிட்ட இடங்களில் கல்லறை திருநாள் அனு சரிக்கப்பட்டது .

இதுபோன்று மாவட்டத்திலும் கிறிஸ்தவ மக்கள் கல்லறை தோட்டங்க ளுக்கு சென்று வழிபட்டனர்.

நெல்லை சந்திப்பு உடையார்பட்டி திரு இருதய ஆலயத்திற்கு சொந்தமான மணிமூர்த்தீஸ்வரம் கல்லறை தோட்டத்தில் உள்ள கல்லறைகளை பங்குத்தந்தை மைக்கேல் ராசு புனித நீர் கொண்டு தெளித்து ஜெபம் செய்தார்.இதில் கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம், கீழப்பாவூர்,பஞ்சபாண்டியூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆர்.சி. கல்லறை தோட்டங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது.

பாவூர்சத்திரம் புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை ஜேம்ஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News