உள்ளூர் செய்திகள்

மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

நெல்லை வண்ணார்பேட்டையில் சி.ஐ.டி.யு. சங்கத்தினர் சாலை மறியல்- 170 பேர் கைது

Published On 2023-07-12 10:05 GMT   |   Update On 2023-07-12 10:05 GMT
  • தினக்கூலி தொழிலாளர் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
  • ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சட்டப்படியான சம்பளம் வழங்க வேண்டும்

நெல்லை:

நெல்லை வண்ணார் பேட்டை ரவுண்டானா வில் சி.ஐ.டி.யு. சார்பில் இன்று சாலை மறியல் நடைபெற்றது.

சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் மாரியப்பன், செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் முருகன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட தலைவர் பீர் முகம்மது ஷா, மாவட்ட இணை செயலாளர் சரவண பெருமாள், துணை தலைவர் சுடலைராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள், தினக்கூலி துப்பரவு தொழிலாளர்களுக்கு தினசரி சம்பளமாக ரூ.730 நிர்ணயம் செய்ய வேண்டும், பல வருடங்கள் சுய உதவிக்குழு மூலம் பணி செய்யும் தினக்கூலி தொழிலாளர் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம்பளத்துடன் கூடிய வாரவிடுமுறை அளிக்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சட்டப்படியான சம்பளம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் மறியல் ஈடுபட்ட 170 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News