10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு: பர்கூர் வேளாங்கண்ணி பள்ளி மாணவர்கள் சாதனை
- அரசு பொதுத் தேர்வினை எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி என்ற பெருமையை சேர்த்துள்ளனர்.
- தென்றலரசி என்ற மாணவி 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 2022-23ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வினை எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி என்ற பெருமையை சேர்த்துள்ளனர்.
இதில் தென்றலரசி என்ற மாணவி 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதே போல் ரித்திகாஸ்ரீ - 493 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், பரமேஸ்வரி- 489 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும், பிரேம்குமார் -488, தமிழழகி - 488 மதிப்பெண்கள் பெற்று நான்காமிடத்தையும், ஷோபிகாஸ்ரீ -487 மதிப்பெண்கள் பெற்று ஐந்தாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இதே போல் 11-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களும் சாதனை படைத்துள்ளனர்.
இந்த சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளியின் நிறுவனரும், பாராளுமன்ற முன்னாள் துணை சபாநாயகரும், ராஜ்சாப உறுப்பினருமான தம்பிதுரை எம்.பி. பாராட்டி நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, பள்ளி தாளாளர் கூத்தரசன், பள்ளியின் முதல்வர் மெரினா பலராமன், தலைமை ஆசிரியர் குலசேகரபாண்டியன், பள்ளியின் பொறுப்பாளர் யுவராஜ் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து 22 ஆண்டுகளாக இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெறும் பள்ளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.