உள்ளூர் செய்திகள்

கோடியக்கரை கடற்கரையில் தூய்மை பணி நடந்தது.

கோடியக்கரை கடற்கரை பகுதியில் தூய்மைபணி

Published On 2023-10-16 09:53 GMT   |   Update On 2023-10-16 09:53 GMT
  • கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் ஈரபுல நில பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
  • ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் ஈரபுல நில பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ் அறிவுரையின்படி, நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் அபிஷேக் தோமர் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக வேதாரண்யம் வனச்சரக அலுவலர் அயூப் கான் அனைவரையும் வரவேற்றார். சமூக ஆர்வலர் டாக்டர். சிவகணேசன் முன்னிலை வகித்தார்.

கோடியக்கரை சரணா லயம், ஈரபுல நிலம் ராம்சார் சைட் ஆகியவை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோடியக்கரை அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு ஓவியப்போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து, கடற்கரை பகுதியில் குப்பைகள், கழிவுகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது.நிகழ்ச்சியை ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இதில் விமானப்படை ஊழியர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்களை வனஉயிரின காப்பாளர் அபிஷேக் தோமர் வழங்கினர்.

Tags:    

Similar News