ரோட்டரி சங்கம் சார்பில் தூய்மை பணி
- சீர்காழி நகராட்சி என்.எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும் நகர் நல சங்கத்தை சேர்ந்தவர்கள் இணைந்து தூய்மை பணியை தொடங்கினர்.
- என். எஸ் மாணவர்கள் ஆசிரியர் பரணி தலைமையில் தூய்மை பணி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி 22 வது வார்டில் சீர்காழி ரோட்டரி சங்கம் சீர்காழி நகராட்சி சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும் நகர் நல சங்கத்தை சேர்ந்தவர்கள் இணைந்து தூய்மை சேவை பணியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் சத்யநாராயணன் தலைமை தாங்கினார்.
நகரமன்ற உறுப்பினர் வேல்முருகன், இன்ஜினியர் சுப்பிரமணியன் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர்.
நகராட்சி ஆணையர் ஹேமலதா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
என். எஸ். எஸ் மாணவர்கள் ஆசிரியர் பரணி தலைமையில் தூய்மை பணி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நகர் நல சங்கத் தலைவர் சீனிவாசன், வீரசேனன், சங்கர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நகர் நல சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ரோட்டரி பொருளாளர் கண்ணன் , பெஸ்ட் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நகர் முழுவதும் தூய்மைப் பணியை என் எஸ் எஸ் மாணவர்கள் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் செய்து முடித்தார்கள். முடிவில் செயலாளர் சுரேஷ் குமார் நன்றி கூறினார்.