வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி தற்காலிகமாக செயல்படவில்லை: சென்னை மெட்ரோ அறிவிப்பு
- தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ்அப் ஆன்லைன் டிக்கெட் எடுக்க முடியாது.
- சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ செயலி, பேடிஎம், சிங்கார சென்னை கார்டு, சிஎம்ஆர்எல் டிராவல் கார்டு பயன்படுத்த வலியுறுத்தல்.
சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய கவுண்டரில் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுப்பதை தவிர்க்கும் வகையில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் பயணிகள் டிக்கெட்டுகள் பெற பல்வேறு ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ செயலி, பேடிஎம், சிங்கார சென்னை கார்டு, சிஎம்ஆர்எல் டிராவல் கார்டு போன்றவை மூலம் டிக்கெட் பெற்று பயணிகள் பயணம் மேற்கொள்ள முடிவும்.
அதேபோல் வாட்ஸ்அப் சாட்பாட் (WhatsApp Chatbot) மூலமாகவும் வாட்ஸ்அப் ஆன்லைன் டிக்கெட் எடுத்து பயணம் செய்யலாம். ஆனால் தற்போது வாட்ஸ்அப் சாட்பாட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக செயல்படவில்லை என சென்னை மெட்ரோ ரெயில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மேற்கொண்ட மற்ற வசதிகைள பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டுள்ளது. பயணிகளில் அசௌகரித்திற்கு வருந்துவதாகவும், தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டபின் அதுகுறித்து அப்டேட் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.