உள்ளூர் செய்திகள்

கலெக்டர் செந்தில்ராஜ் தீர்மானங்களை ஆய்வு செய்த காட்சி.

பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

Published On 2022-08-19 09:08 GMT   |   Update On 2022-08-19 09:08 GMT
  • கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
  • பாஞ்சாலங்குறிச்சி ரேஷன் கடை, சமுதாய நலக்கூடம் கலெக்டர் பார்வையிட்டார்.

புதியம்புத்தூர்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சி கிராமத்தில் சுதந்திர தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.

பின்பு சிலோன் காலனி வழியாக செல்லும் உயர் மின்னழுத்த மின் கம்பியை பார்வையிட்டார். பாஞ்சாலங்குறிச்சி ரேஷன் கடை, சமுதாய நலக்கூடம் பார்வையிட்டார்.

பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டையில் கட்டபொம்மன் வரலாற்றை பறைசாற்றும் வகையில் ஒலி ஒளி காட்சிகள் அமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின்போது கலெக்டருடன் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி)சரவணன், ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ராஜன், தாசில்தார் நிஷாந்தினி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News