தேனி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
- ஊஞ்சாம்பட்டி, வடபுதுப்பட்டி ஆகிய பகுதிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.
- சமதர்மபுரம் ரேசன் கடை மற்றும் ஊஞ்சாம்பட்டி மகளிர் ரேசன் கடை ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.
தேனி:
தேனி மற்றும் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊஞ்சாம்பட்டி, வடபுதுப்பட்டி ஆகிய பகுதிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.
ஊஞ்சாம்பட்டி ஊராட்சி தென்றல் நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் 2021-22 கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் தடுப்பணை அமைத்தல் பணி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம் 2021-22 கீழ் ரூ.14.5 லட்சம் மதிப்பீட்டில் ரேசன் கடை கட்டுமானப்பணி, பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் வடபுதுப்பட்டி ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (ஊரகம்) 2021-22, கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீடுகட்டும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் 2019-20 கீழ் ரூ.7.80 லட்சம் மதிப்பீட்டில் அம்மாபுரம் அங்கன்வாடி தெருவில் சிமெண்ட் சாலை அமைத்தல் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் 2021-22 கீழ் ரூ.7.70 லட்சம் மதிப்பீட்டில் முத்தைய கோவில் தெரு ஓடையில் பாலம் அமைத்தல் பணி,
கிராமப்புற உட்கட்டமைப்பு திட்டம் 2021-22 கீழ் ரூ.6.00 லட்சம் மதிப்பீட்டில் கருவேல்நாயக்கன்பட்டி சாலை முதல் பின்னத்தேவன்பட்டி சாலை வரை தார்சாலை அமைக்கப்பட்ட பணி ஆகிய பணிகளையும் ஆய்வு செய்து விரைவில் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், அல்லிநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் சமதர்மபுரம் ரேசன் கடை மற்றும் ஊஞ்சாம்பட்டி மகளிர் ரேசன் கடை ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.