உள்ளூர் செய்திகள்

புளியங்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் கலெக்டர் ஆகாஷ் ஆய்வு மேற்கொண்டார்.அருகில் நகர் மன்ற தலைவி விஜயா சவுந்திர பாண்டியன் உள்ளார்.


புளியங்குடி கல்வி நிலையங்களில் கலெக்டர் ஆய்வு

Published On 2022-11-16 08:59 GMT   |   Update On 2022-11-16 08:59 GMT
  • புளியங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல் நிலைப்பள்ளி ஆகியவற்றில் உள்ள இடிந்த கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடங்கள் கட்டி தர வேண்டும் என்று புளியங்குடி நகர் மன்ற தலைவி விஜயா சவுந்திர பாண்டியன் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்து இருந்தார்.
  • தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் புளியங்குடியில் உள்ள அரசு ஆண்கள், பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார்.

புளியங்குடி:

புளியங்குடி பகுதியில் உள்ள அரசு கல்வி நிலையங்களில் தென்காசி மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் புளியங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல் நிலைப்பள்ளி ஆகியவற்றில் உள்ள இடிந்த கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடங்கள் கட்டி தர வேண்டும் என்று புளியங்குடி நகர் மன்ற தலைவி விஜயா சவுந்திர பாண்டியன் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்து இருந்தார்.

அதனை கருத்தில் கொண்டு தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் புளியங்குடியில் உள்ள அரசு ஆண்கள், பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது புளியங்குடி நகர் மன்ற தலைவி விஜயா சவுந்திர பாண்டியன், ஆணையாளர் சுகந்தி, பொறியாளர் முகைதீன் அப்துல் காதர், சுகாதார அலுவலர்கள் கணேசன், கைலாசம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News