உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் இயங்கு ம் கல்வி நிறுவன விடுதிகள் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2023-08-15 09:31 GMT   |   Update On 2023-08-15 09:31 GMT
  • செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் உரிமம் பெற்றிட வேண்டும்.
  • 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

கடலூர்:

கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;- கல்வி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் விடுதிகள் தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் முறைப்படுத்தும் சட்டம் 2014-ன் கீழ் உரிமம் பெறுவது கட்டாயம் ஆகும். எனவே, கடலூர் மாவட்டத்தில் அரசு சாரா, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் 18 வயது வரையுள்ள மாணவ மாணவியருக்கான விடுதிகளானது வருகின்ற செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் உரிமம் பெற்றிட வேண்டும்.

அவ்வாறு உரிமம் பெற்றிடாமல் விடுதிகள் இயக்கி வரும் நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களை தேர்விற்கு தயார்படுத்தும் நோக்கில் கல்வி நிறுவனங்களில் தற்காலிகமாக தங்கி பயில்வதற்கும் விடுதி உரிமம் பெறுவது கட்டாயமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News