கலெக்டர் அலுவலக விவசாயிகள் குறை கேட்பு கூட்டம்என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்கள் திரண்டதால் பரபரப்பு
- கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
- விவசாயிகள் கோரிக்கை மீது பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்து தர வேண்டுமென மனுக்கள் வழங்கினார்,
கடலூர்
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் இன்று காலை நடைபெற்றது குஞ்சிதபாதம் - என்.எல்.சி. சார்பாக விருத்தாச்சலம்,புவனகிரி,ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் உள்ள 30 ஏரிகளை தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் த்துறையூர் காந்தி: -அரசூர் தென்பெண்ணை ஆற்றில் உள்ள மலட்டாறு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் மற்றும் அதே பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் வீராணம் ஏரி விவசாயிகள் சங்கத் தலைவர் பாலு: - மத்திய கனிம வள நிறுவனம் சார்பில் வீராணம் ஏரியை சுற்றியும் 2017 முதல் ஆய்வு செய்து வருகிறார்கள். அப்பகுதி கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் 2020 பாதுகாத்த வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த ஆய்வு தொடரப்படுவதால் இந்த ஆய்வை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த நிலையில் என்.எல்.சி.க்கு வீடு , நிலம் கொடுத்த பாதிக்கப்பட்டோர் கூட்டமைப்பு சேர்ந்தவர்கள் திடீரென்று கூட்டத்தில் திரண்டு மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது- 2000 ஆம் ஆண்டு முதல் நிலம் வீடு எடுத்த அனைவருக்கும் நிரந்தர வேலை கொடுக்க வேண்டும். வேலை வாய்ப்புக்கு பதில் ரு 1, 09, 500 கொடுத்ததை ஏற்க முடியாது. அத்தொகையை வாங்கிய அனைவருக்கும் நிரந்தரவேலை கொடுக்க வேண்டும்.வேலை வேண்டாம் என்பவருகளுக்கு இன்றைய வாழ்வாதார தொகை கொடுக்க வேண்டும். 2000-ம் ஆண்டு முதல் நிலம் கொடுத்த அனைவருக்கும் 01.01.2014 முதல் கொடுக்க கூடிய இழப்பீடுத் தொகையை வழங்க வேண்டும். நிலத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அதில் உள்ள மின் இணைப்பை என்எல்சி செலவில் மாற்றம் செய்து கொடுக்க வேண்டும் தன்னிச்சையாக செயல்படாமல் விவசாயிகள் கோரிக்கை மீது பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்து தர வேண்டும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வழங்கினர். இதனை தொடர்ந்து விவசாய குறை கேட்பு கூட்டம் நடந்தது.