சேலத்தில் லாரியை முந்தி செல்ல முயன்ற கல்லூரி மாணவர் காயம்
- சேலத்தில் லாரியை முந்தி செல்ல முயன்ற கல்லூரி மாணவர் காயமடைந்தார்.
- விபத்தில் சிக்கிய 2 பேரில் ஒரு மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம்:
கிருஷ்ணகிரி டவுன் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்.
இவரது மகன் நித்தியானந்தம் (வயது 20). இவர் சேலம் உடையாபட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில், அதே கல்லூரியில் பி.எஸ்.சி 2-ம் ஆண்டு படிக்கும் ஓமலூர் அருகே உள்ள கோட்டை மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த மதியழகன் மகன் ஹரிஷ் (20) என்பவரை அழைத்துக் கொண்டு அயோத்தியாப்பட்டணம் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள், லாரியில் உரசி இருவரும் கீழே விழுந்தனர்.
இதில் நித்தியானந்தம் தலையில் பலத்த அடிபட்டு மயங்கினார். அந்த வழியே வந்தவர்கள் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நித்தியானந்தம் சிகிச்சை பெற்று வருகிறார். ஹரிஷூம் காயமடைந்தார்.
இது குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.